இயற்கை உணவுகள்
நிறைய மாணவர்கள் நன்றாகப் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு ஆர்வம், கவனம், முயற்சி ஆகிய மூன்றையும் பயிற்சியாகத் தொடர வேண்டும்.
அது மட்டுமின்றி மூளையை சுறுசுறுப்பாக வைப்பதற்கு சரிவிகித சத்துணவு அவசியம். குறிப்பாக ஆன்டி ஆக்சிடண்ட்கள், ஒமேகா 3, வைட்டமின்கள், மினரல்கள் அடங்கிய உணவுகள் மூளைக்குச் செல்லும் ரத்தவோட்டத்தை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்கிறது.
வால்நட் என்கிற அக்ரூட், பாதாம் பருப்பு, சூரிய காந்தி விதைகளில் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது. எனவே இவற்றை தினமும் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். வல்லாரைக் கீரை, வெண்டைக்காய், பிரக்கோலி, காலிபிளவர், முட்டைக் கோஸ், தக்காளி போன்றவைகளில் மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளன. இவற்றில் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சதுரங்கம், சீட்டு, கணிதப் புதிர் போன்றவை ஞாபகசக்தியை அதிகரிக்கும் விளையாட்டுகள். பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கிறது என்று நம்பிக்கை கொடுங்கள். நிச்சயம் நினைவாற்றல் அதிகரிக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
