நம்பக்கூடாத ஐந்து நபர்கள்

உளவியல் உண்மைகள்

ஏமாற்றுவது குற்றம் அல்ல, ஏமாறுவதே தவறு என்பார்கள். ஏனென்றால் தவறான நபரை நம்பியதற்குக் கிடைக்கும் பரிசு தான் ஏமாற்றம். எனவே, எப்படிப்பட்ட நபர்களை நம்பக்கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  • காரணம் இல்லாமல் அன்பளிப்பு கொடுக்கும் நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் இலவசம் என்று எதுவும் இந்த உலகில் கிடையாது. அன்பளிப்பு என்பது தூண்டிலாகவே இருக்கும்.
  • எப்போதும் புகழ்ந்துகொண்டே இருப்பவர்களை நம்பாதீர்கள்.
  • நிறைய வாக்கு கொடுப்பவர்கள், கொடுத்த வாக்கை மறப்பவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்.
  • தன் மீது இரக்கம் வரும் வகையில் சொந்தக் குடும்பத்தினர் மீது குற்றம் சொல்பவரை நம்பாதீர்கள்.
  • கேட்காமல் உதவி செய்வதற்கு முன்வரும் நபர்களை நம்ப வேண்டாம்.

இதுபோன்ற நபர்களை நம்பக்கூடாது என்றாலும் அவர்களுடன் பழகுவதை நிறுத்தாதீர்கள். அதாவது யாரையும் வெறுக்க வேண்டாம். இந்த நபர்களைப் புரிந்துகொண்டு பழகினால் ஏமாற்றங்களில் இருந்து தப்பிக்கலாம்.

Leave a Comment