அம்மா என்றாலும் மனுஷி…. அவர் பொய் சொல்வார்?

உளவியல் அதிர்ச்சி

அம்மா என்றால் பொய் சொல்ல மாட்டார், தியாக மனப்பான்மை கொண்டவர், பரந்த உள்ளம் கொண்டவர் என்றெல்லாம் பொதுவாக சொல்லப்படுவது உண்மை அல்ல. அவரும் ஒரு பெண். அம்மாவுக்கும் சுயநலம் உண்டு.

எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று என்று அம்மாக்கள் சொல்வார்கள். ஆனால், பாகுபாடு பார்த்தே வளர்ப்பார்கள். பொதுவாக மூத்த பிள்ளைக்கு அதிகம் செல்லம் கொடுப்பார்கள். அடுத்து பிறந்த பிள்ளைகள் எல்லாம் அவர்களுடைய விருப்பமின்றி பிறந்த பிள்ளைகளாகவே இருப்பார்கள். அதனால் மற்றவர்களை அதிகம் மதிக்க மாட்டார்கள். அதேநேரம், எந்த பிள்ளை உயர்ந்த நிலையில் இருக்கிறதோ, அந்த பிள்ளையை அதிகம் கொண்டாடுவார்கள். தன்னுடைய வேண்டுதலால், தன்னுடைய உழைப்பால் அந்தப் பிள்ளை முன்னேறியது என்று தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வார்கள். 

சுயநல அம்மாக்கள்

பிள்ளைகள் தவறு செய்யும்போது நிறைய அம்மாக்கள் கண்டிக்காமல் அதை மூடி மறைப்பதுண்டு. அதனாலே நிறைய பிள்ளைகள் தைரியமாக பொய் சொல்லவும், தவறு செய்யவும் தொடங்குகிறார்கள்.

பிள்ளைகள் படிக்கும் காலம் வரையிலும் அம்மாக்கள் கணவனுக்கு மதிப்பு கொடுப்பார்கள். பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கியதும் பிள்ளைகளுடன் சேர்ந்துகொண்டு கணவனை எதிர்ப்பார்கள், அவமானப்படுத்துவார்கள்.

மருமகள் மீது மகன் அதிக பாசம் வைப்பது தெரிந்தால் பிரச்னை செய்து சண்டை உருவாக்குவார்கள். எனவே, அம்மா என்ற உறவுக்கு அளவுக்கு அதிகமான மதிப்பும், மரியாதையும் அவசியம் இல்லை. அம்மாவுக்கு நீங்கள் மதிப்பு கொடுங்கள். அது போதும்.  உங்கள் குடும்பத்தின் மீதும் மனைவி மற்றும் பிள்ளைகள் மீது அம்மாவை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். முக்கியமாக அம்மாவுக்காக மனைவியைப் பிரிந்துவிடாதீர்கள்.

Leave a Comment