தமிழின் சுவை
அடடா மழைடா அடை மழைடா…. அழகா சிரிச்சா புயல் மழைடா… என்று மழைப் பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். மழை என்றால் எல்லோருக்கும் தெரியும்.
அதாவது வானத்தில் இருந்து தண்ணீர் விழுவதை மழை என்று பொதுவாக அழைக்கிறோம். ஆனால், நம் தமிழர்கள் மழையை விதவிதமாக அழைத்திருக்கிறார்கள்.
அடை மழை என்றால் நாள் முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதைத்தான் அடை மழை என்பார்கள்.
கனமழை ன்றால் ளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
ஆலங்கட்டி மழை ன்றால் பனிக் கட்டி மழையுடனோ அல்லது தனியாகவோ விழும் மழை.
பனிமழை – என்றால் பனி மழையாகப் பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.
ஆழிமழை – ஆழி என்றல் கடல் இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும். புயல் – புயல் என்பது காற்றுடன் வரும் மழையை குறிக்கும்.
அடேங்கப்பா, தமிழில்தான் மழைக்கு எத்தனை பெயர்.
