சூரியன் மேற்கே உதிப்பதைப் பார்க்க ஆசையா..?

கொஞ்சம் காத்திருங்கள்.

சூரியன் கிழக்கே உதிக்கும் என்றுதான் நாம் பாடங்களில் படிக்கிறோம். ஆனால் வீனஸ் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகத்தில் மட்டும் சூரியன் மேற்கே உதிக்கிறது. இதற்குக் காரணம் தெரியுமா?

பூமி போன்ற கிரகங்கள் எல்லாம் மேற்கில் இருந்து கிழக்காக சுழல்கின்றன. ஆனால் வெள்ளி கிரகம் மட்டும் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. சூரிய குடும்பத்தின் இரண்டாவது கோளான வெள்ளி மாலுமிகளுக்கு வழி காட்டும் நட்சத்திரமாகவும் செயல்புரிகிறது. இது விடியலிலும் மாலை, இரவு நேரமும் வானில் தெரியும். அதனால் இதனைத்தான் நம் தமிழர்கள் விடி வெள்ளி என்று சொல்வார்கள்.

இது கொஞ்சம் சோம்பேறி கிரகம் என்றே சொல்லலாம். ஏனென்றால் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் ஆகிறது. இங்கே 480 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பதால், ஈயம், இரும்பு போன்றவை எளிதில் உருகிவிடும். அதனால் இங்கே உயிரினம் வாழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஆனால், கால மாற்றத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மனிதர்கள் அங்கே சென்று வசிக்கும் சூழலும் உருவாகலாம். அப்படி மனிதர்கள் அங்கு வசித்தால் அவர்களுக்கு மட்டும் சூரியன் மேற்கே உதிக்கும். ஆனால், அதற்கு எப்படியும் ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்.

Leave a Comment