எட்டு சீக்ரெட்ஸ்
எத்தனை உழைத்தாலும் மேல் அதிகாரிகளிடம் நல்ல பேர் எடுக்கவே முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா..? இந்த எட்டு விஷயங்களை மட்டும் கடைப்பிடித்துப் பாருங்கள்.
- அலுவலக நேரத்தில் சொந்த வேலைகள் செய்வது, சொந்த விஷயங்கள் பேசுவது வேண்டவே வேண்டாம்.
- அவசர விஷயமாக வெளியே செல்ல வேண்டியிருந்தாலும், முறைப்படி மேலதிகாரியிடம் அறிவித்துவிட்டுச் செல்லுங்கள்.
- சக ஊழியர்களை மரியாதையுடன் நடத்துங்கள், அதேநேரம் நெருக்கம் காட்டாதீர்கள்.
- அலுவலக நேரம் முடிந்துவிட்டது என்று வேலையை அரைகுறையாகப் போட்டுவிட்டுக் கிளம்பாதீர்கள்.
- பொய் காரணம் சொல்லி லீவு போடாதீர்கள்.
- அலுவலகத்திலிருந்து பேப்பர், பேனா கூட வீட்டுக்கு எடுத்துச்செல்லாதீர்கள்.
- உங்கள் இருக்கையையும் டேபிளையும் சுத்தமாக வைத்திருங்கள்.
- அலுவலகப் பெயரைப் பயன்படுத்தி ஆதாயம் தேடாதீர்கள்.
அலுவலகத்தின் மீது நீங்கள் உண்மையிலே மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறீர்கள் என்பது தெரிந்தால், நிச்சயம் உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
