இடதுகைப் பழக்கத்தை மாற்ற வேண்டுமா..?

உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க.

மைக்கேல் ஏஞ்சலோ, அலெக்ஸாண்டர், நெப்போலியன், பிடல் காஸ்ட்ரோ, சார்லி சாப்ளின், மர்லின் மன்றோ, ஒபாமா போன்றவர்களுக்கு உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

இவர்கள் அனைவருமே இடதுகை பழக்கம் உள்ளவர்கள்.

பொதுவாக மனிதர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேருக்கு இடப்பக்க மூளைதான் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலோர் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 7 முதல் 10 சதவிகித மனிதர்கள்தான் இடது கை பழக்கம் உள்ளவர்களாகப் பிறக்கிறார்கள்.

நமது வீட்டின் கதவுப் பிடிகள், பூட்டுகள், திருகாணிகள், கார்கள், இசைக்கருவிகள் போன்ற பலவும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வசதியாகத்தான் தயாரிக்கப்படுகிற்து. அதனால் இவற்றைக் கையாள்வதில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும்.

இடது கை பழக்கம் தவறானது என்று பெற்றோர்கள் கவலைப்படுவதும், குழந்தைகளைத் திருத்த முற்படுவதும் அவசியம் இல்லாதது. இடதுகைப் பழக்கம் என்பது ஒரு குறையே கிடையாது. அதனால் அதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வலிந்து பழக்கத்தை மாற்ற முற்பட்டால் பேச்சுத் திறனும் பார்வைத் திறனும் பாதிக்கப்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் இடது கை பழக்கமும் ஆரோக்கியமானதுதான்.

Leave a Comment