எஸ்கேப் வழிகள்
முன்பு மக்கள் மாலை நேரங்களில் வீட்டு வாசலில் உட்கார்ந்து ஜாலியாக அரட்டை அடிப்பார்கள். சிறுவர்கள் விளையாடுவார்கள். ஆனால் இப்போது, மாலை நேரம் வந்தாலே ஜன்னல், கதவுகளை எல்லாம் சாத்துகிறார்கள். இப்படி செய்யவில்லையென்றால் வீட்டுக்குள் கொசுக்கள் படையெடுத்து வந்துவிடும்.
கொசுக்களிடம் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் தண்ணீருக்கு அடுத்தபடியாக நிறைய நோய்களைப் பரப்பும் தன்மை கொசுக்களுக்குத்தான் இருக்கிறது. நான்கு பேர் பேசிக்கொண்டு இருந்தால், அவர்களில் ஒருவர் அல்லது இருவரை மட்டும் கொசுக்கள் விடாமல் கடிக்கும். மற்றவர்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதற்குக் காரணம் தெரியுமா?
பொதுவாக மனிதர்களைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான். மோப்ப சக்தி மூலம் மனிதனைத் தேடி வருகின்றன. கொசுக்களால், அதன் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான வாசனையை உள்வாங்கிக்கொள்ள முடியும். யாருடைய வியர்வையில் கொசுக்களுக்குப் பிடித்தமான வாசம் தென்படுகிறதோ, அவர்களைத்தான் கொசுக்கள் தேடிப்பிடித்துக் கடிக்கின்றன.
எனவே, இனிமேல் கொசு உங்களை மட்டும் அதிகமாகக் கடித்தால், அதற்குக் காரணம் வியர்வையில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வியர்வை வாசனையைக் குறைக்கும்படி குளியல் போடுவது, கொசுவை விரட்டும் களிம்புகளை தடவுவதன் மூலம் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.
