ரத்தம் குடிக்குமா வவ்வால்..?

அதிர்ச்சி தகவல்கள்

வவ்வாலைப் பார்த்து ஆச்சர்யப்படுபவர்களைவிட, மிரள்பவர்கள்தான் அதிகம். ஏனென்றால் வவ்வால்கள் மனித ரத்தத்தைக் குடிக்கக்கூடியவை என்ற எண்ணம்தான் காரணம்.

நிஜம் இல்லையா?

ரத்தம் குடித்து வாழும் வவ்வால்கள் இருக்கின்றன. ஆனால் அவை மனிதனை நெருங்குவதில்லை, விலங்குகளின் உடம்பில் இருந்து ரத்தத்தைக் குடிக்கின்றன. ஆனால் இன்னும் இருபது வருடங்களில் வவ்வாலை உயிரியல் கண்காட்சியில் மட்டும்தான் பார்க்கமுடியும் என்கிறார்கள் இயற்கை ஆய்வாளர்கள்.

ஏன் அப்படி?

பல நோய்களைத் தீர்க்கும் தன்மை வவ்வாலுக்கு உண்டு என்று கருதப்படுவதால், இதனை பலரும் வேட்டையாடுகிறார்கள். பறக்கும் தன்மையுடன் இருக்கும் ஒரே பாலூட்டி இனம் வவ்வால் மட்டும்தான். வவ்வாலுக்கு மேலும் சில சிறப்புக்கள் இருக்கின்றன. அதாவது தங்கள் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உண்ணக்கூடியவை.

பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் தூள் ஆகியவற்றை உண்டு வாழும் வவ்வால்களும்  பூச்சிகள், வண்டுகள், சிறிய பறவைகள்,  ஈக்கள்,  கொசுக்கள்,  தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழும் வவ்வால்களும் இருக்கின்றன.

வவ்வால்களின் கால்களில் போதிய பலம் இருப்பதில்லை என்பதால் மரங்களில், கிணறுகளில், குகைகளில் தலைகீழாக தொங்குகின்றன. இப்படித் தொங்கினாலும் இவைகளுக்கு எந்த சக்தி இழப்பும் ஏற்படுவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

Leave a Comment