அற்புதங்கள் அதிசயங்கள்
மனிதர்களின் உடலுக்கு வரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி தெய்வீக மூலிகைகளுக்கு இருக்கிறது என்று தமிழ் மருத்துவம் உறுதிபடச் சொல்கிறது.
உடல் நலத்தை காக்கும் துளசி, வில்வம், வேம்பு, அருகு, வன்னி போன்றவற்றைத்தான் தெய்வீக மூலிகைகள் என்று சொல்கிறார்கள். ஆமாம், இவற்றை பேசும் மூலிகைகள் என்றும் சொல்வார்கள். அது ஏன் தெரியுமா?
இந்த மூலிகைகளுக்கு முன்பு பேசும் சக்தி இருந்ததாம். ஒவ்வொரு மூலிகையும் அதன் சக்திகள் குறித்து முனிவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தன. ஆனால், அகத்தியரின் சில சீடர்கள் இந்த மூலிகைகளை தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்தார்கள். இதை அறிந்த அகத்தியர் மூலிகையின் பேசும் சக்தியை தடை செய்துவிட்டார். அதேநேரம், மூலிகையின் பயன்கள் அப்படியேதான் இருக்கின்றன.
மூலிகை பயன்கள்
துளசி சுவாசக் கோளாறை நீக்குவதுடன் ரத்தம் சுத்திகரிக்கப் பயன்படுகிறது.
வில்வம் – ஆஸ்துமா, நீரிழிவு, வலிப்பு போன்ற நோய்களைக் குணப்படுத்தும்.
வேம்பு எனப்படும் வேப்பிலையின் மகிமை நம் எல்லோருக்குமே தெரியும். தொற்று நோய் மற்றும் வெப்பம் சம்பந்தமான நோய்களைத் தணிக்கவல்லது.
அருகம்புல் மூலம் நீரிழிவு மற்றும் தோல் வியாதிகளைத் தீர்க்கமுடியும்
வன்னி இலைகள் பெண்களின் நோய்களை குறிப்பாக வயிற்று வலி, குழந்தையின்மை போன்றவற்றைத் தீர்க்கிறது. மூலிகைகள் இன்று பேசவில்லை என்றாலும் அதன் தன்மைகளை அறிந்து நாம் பயன்படுத்தினால் நம் உடலும் மனமும் சிறப்படையும்.
