மக்கள் கைக்கு வந்த சமுதாய நலக்கூடங்கள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 481

சமுதாய நலக்கூடங்கள் என்ன காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த பயன்பாடு இல்லாமல் யாரோ சிலர் ஆதாயம் அடைவதை தடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி முடிவு செய்தார். ஆதாயம் அடையும் நபர்கள் மீது நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, அப்படி எடுத்தாலும் பயன் கிடைக்காது என்பதால், டெக்னாலஜி உதவியுடன் இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்வந்தார்.

முதல் கட்டமாக சமுதாய நலக் கூடங்களை  முன்பதிவு  செய்வதற்கு மேயர் சைதை துரைசாமி கடுமையான  கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்.  

அதாவது உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே மண்டபம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, திருமணத்  தேதி, மணமகன்.  மணமகள்  புகைப்படம்,  வீட்டு முகவரி,  இருப்பிட முகவரிக்கான  சான்று  போன்ற அனைத்தும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவந்தார்.

இதற்கு ஒருசிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். சாதாரண மக்களிடம் இத்தனை ஆதாரங்கள் கேட்பது சரியாக இருக்காது என்று அதிகாரிகளும் இதனை தடுப்பதற்கு முன்வந்தனர்.

ஆனால், மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த கட்டுப்பாடுகளைக் குறைப்பதற்கு முன்வரவில்லை. அதோடு, தகுந்த ஆதாரங்களுடன் யார் வேண்டுமானாலும், அவர்களே ஆன்லைன் மூலம் மண்டபத்தை முன்பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்தார்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு ஏழைகளுக்குத் தெரியாது, அவர்களால் இத்தனையையும் ஆன்லைனில் ஏற்றி முன்பதிவு செய்ய முடியாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கும் ஒரு தெளிவான வழிகாட்டு விதிமுறை கொண்டுவந்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment