அதிரடியாக நீக்கப்பட்ட தணிக்கை தடைகள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 475

செய்வதைத் திருந்தச் செய்யவேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார். அதற்கு உதாரணமாக தணிக்கைத் தடைகளைச் சொல்லலாம். மற்ற மேயர்கள் இதை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை.

ஆனால், மேயர் சைதை துரைசாமி காலகட்டத்தில்தான் முதன்முறையாக தணிக்கைத் தடைகள் நீக்குவதற்கு பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்கள்  நடத்தப்பட்டது.   தணிக்கைத் துறை  தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு,  புதிய அலுவலர்களை நியமனம் செய்து, முந்தைய தணிக்கைத் தடைகளை விரைந்து  நீக்குவதற்குத் தேவையான பணிகள் நடைபெற்றன.

முந்தைய தணிக்கைத் தடைகளுக்கு பொறுப்பாக்கப்பட்ட அதிகாரிகள் மீது  சட்ட  விதிகளின் படி  நடவடிக்கை எடுக்க இயலாது  என்றாலும், அப்போதைய விதிகளுக்கு உட்பட்டு   பணியில் இருந்த அதிகாரிகள்  மீது மேயர் சைதை துரைசாமியால் பல்வேறு  ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

  • தவறுகளுக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள், அதிகாரிகளின் பணிக்கொடை, அகவிலைப்படி போன்ற   ஓய்வு காலப் பணப் பயன்கள் , சைதை பதவிக்கு வந்தபிறகு முடக்கம் செய்யப்பட்டன.
  • மாநகராட்சி  நிர்வாகம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடப்பதற்கு உதவும் வகையில்,  அனைத்து ப் பணிகளும் கணினி மூலம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
  • அனைத்து ஆவணங்களும்,  கோப்புகளும்  டிஜிட்டல் முறையில் கணினியில் சேகரிக்கப்பட்டது. அதனால் கோப்புகள் காணவில்லை, அழிக்கப்பட்டது என்ற  நிலைமை  ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது.
  • காலம் தாழ்த்துவது இல்லாமல்,  அந்தந்த ஆண்டே தணிக்கை முடிக்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டு, அதன்படியே செயல்படுத்தப்பட்டது.  அதனால் வருடக்கணக்கில் தணிக்கை செய்யப்படாத  நிலை வராது.
  •  எந்த அதிகாரியும் தணிக்கைத்தடை  நீக்கப்பட்ட பின்பே முறைப்படி  பணி ஓய்வு பெற முடியும் என்பது கட்டாயமாக்கப்பட்டது..
  • செலவினப்  பட்டியல்களை  முன்தணிக்கைக்கு   உட்படுத்தப்படும் முறை கொண்டுவரப்பட்டது. அதனால்  மிகப்பெரிய இழப்புகள்  ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்காது.

மக்கள் பணத்தை விரயம் செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் அக்கறையுடன் இருந்தார். அதனால் மாநகராட்சியின்  ஒவ்வொரு துறை அதிகாரியும் விழிப்புணர்வுடன் தங்களது கடமையைச் செய்ய வேண்டும்,   மாநகராட்சிக்கு எந்த வகையிலும் நிதி இழப்பு எற்படக் காரணமாக இருக்கக்கூடாது என்பதில் கண்டிப்பு காட்டினார்.  அதனால் முடங்கிக்கிடந்த தணிக்கைத் துறை, மேயர் சைதை துரைசாமி காலகட்டத்தில் சுறுசுறுப்படைந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment