மாமன்றத்தில் தணிக்கைத் துறை குற்றச்சாட்டு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 478

மேயர் சைதை துரைசாமிக்கு முந்தைய காலகட்டத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக இழப்பீடு ஏற்பட்டதாக தணிக்கைத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இதனை எல்லாம் சென்னை மாமன்றத்தில் மேயர் சைதை துரைசாமி பதிவு செய்தார்.

இந்த நிர்வாகச் சீரழிவு குறித்து சம்பந்தப்பட்ட கட்சியினர் விளக்கம் தரலாம் என்று மன்றத்தில் மேயர் சைதை துரைசாமி வாய்ப்பு கொடுத்தார். அப்போதும் எதிர்க்கட்சியினர் யாரும் வாய் திறக்கவில்லை.

அதேநேரம், மேயர் சைதை துரைசாமியின் ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு முறை தணிக்கைத் துறை குற்றச்சாட்டு எழுந்தது. அம்மா உணவகங்களுக்கு தரமற்ற சப்பாத்தி மிஷின்கள் வாங்கியதால் அரசுக்கு 5.69 கோடி ரூபாய் இழப்பு என்று மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் குற்றம் சாட்டியது.

அம்மா உணவகத்தில் இரவு உணவு கொடுப்பது ஆரம்பத் திட்டங்களில் இல்லை. அம்மா உணவகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பினால் இரவு உணவு போடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

திடீரென இரவு சப்பாத்தி போடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டதும், அவசரம் அவசரமாக சப்பாத்தி மிஷின்கள் வாங்கப்பட்டதால் குளறுபடி நிகழ்ந்தது. ஆனால், குறைபாடுள்ள மிஷின்கள் கொடுத்த நிறுவனம் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தவறுகள் நடக்கும்போது கண்ணை மூடிக்கொண்டு இருக்காமல், உடனே நடவடிக்கை எடுத்தார் சைதை துரைசாமி. அப்போதுதான், இந்தக் குற்றச்சாட்டுக்கு மேயர் சைதை துரைசாமி காரணம் இல்லை என்பது மக்களுக்குத் தெரியவந்தது. இந்த அதிரடி நடவடிக்கைதான்  மேயர் சைதை துரைசாமியின் நிர்வாகத்திற்கும் முந்தைய நிர்வாகத்திற்கும் உள்ள வித்தியாசம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment