ஸ்மார்ட் வழிகள்
எப்படியாவது தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிவிட வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக இரவு பகலாக விழுந்து விழுந்து படிக்கிறார்கள். டியூஷன் வைக்கிறார்கள்.
இப்படி கஷ்டப்பட்டு படிப்பதை விட ஸ்மார்ட் ஆக படித்தால் அதிக மதிப்பெண் வாங்கிவிட முடியும். எல்லோருக்கும் உதவும் சில குறிப்புகளை மட்டும் பார்க்கலாம்.
- மீண்டும் மீண்டும் சில கேள்விகள் கேட்கப்படுவதுண்டு. இப்படிப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு புத்தகத்தில் இருக்கும் தலைப்புகளுடன், குழப்பம் இல்லாமல் வரிசைப்படி அனைத்து கீ வேர்ட்ஸ்களும் இடம் பெறும் வகையில் பதில் எழுதினால் முழு மதிப்பெண் பெறலாம்.
- கடந்த 5 ஆண்டு வினா தாள்களுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கும் முன்பாக பதில் எழுதிப் பழக வேண்டும்.
- பள்ளி தேர்வுகளின் விடைத் தாள்களை நிதானமாகத் திருப்பிப் பார்த்து, என்ன காரணத்துக்காக மதிப்பெண் குறைக்கப்பட்டது என்பதை அறிந்து, அந்த குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
- எல்லா வினாக்களுக்கும் மதிப்பெண் பெற்றுத்தரும் முக்கியமான வார்த்தைகள் உண்டு. அவை எல்லாமே விடையில் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.
- தேர்வு நாளில் பரபரப்பும், டென்ஷனும் அடையக் கூடாது. கடைசி நேரத்தில் இது வரை படிக்காத பாடத்தைப் படித்து டென்ஷனாகக் கூடாது.
தேர்வுக்கு முந்தைய நாள் குறைந்தது ஐந்து முதல் ஆறு மணி நேரம் தூக்கம் அவசியம். அதோடு சத்தான காலை உணவும் முக்கியம். தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் வரிசையாகப் பதில் எழுதுங்கள். தெரியாத கேள்விகளை கடைசியில் எழுதுங்கள். இப்படி தேர்வை எதிர்கொண்டால் நிச்சயம் அதிக மதிப்பெண் எடுக்கலாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
