ஊஞ்சல் ஆடும் தேவதைகள்

பாசிடிவ் பொழுதுபோக்கு

சங்க காலத்தில் இருந்தே பெண்களின் விளையாட்டாக அறியப்பட்டிருப்பது, ஊஞ்சல் ஆட்டம்தான். குளக்கரைக்கு அருகே, ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக  விளையாடுவார்கள். ஆனால் இப்போது பொழுதுபோக்கு பூங்காக்களிலும் வசதியானவர்கள் வீடுகளிலும் மட்டும்தான் ஊஞ்சலைக் காண முடிகிறது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.  ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுவதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதனால்தான் திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இன்னமும் நடத்தப்படுகிறது.
ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது.. பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும் இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவைக் கொடுத்து இதயத்தை சீராக இயங்கவும் செய்கிறது.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், என்ற நம்பிக்கை காரணமாக பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். சின்னக் குழந்தையாக இருக்கும்போது தொட்டிலில் போட்டு தாலாட்டிய அனுபவம் ஊஞ்சலில் கிடைப்பதாகவும் பெண்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

Leave a Comment