என்ன செய்தார் சைதை துரைசாமி – 479
மேயர் சைதை துரைசாமி மேயர் பதவிக்கு வந்த நேரத்தில், எம்.எம்.டி.ஏ. காலனியில் பழுதடைந்த ஒரு திருமண மண்டபத்தை இடித்துவிட்டு புதிய மண்டபம் கட்டுவதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது தெரியவந்தது. அதற்கு பணம் கட்டவேண்டிய நிலை இருந்தது. ஆகவே, அந்தக் கோப்பை வாங்கி மேயர் சைதை துரைசாமி ஆய்வு செய்தார்.
குறிப்பிட்ட இடத்தை வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்குவதற்கு 2.95 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற மேயர்கள் என்றால், அந்த தொகையை அப்படியே கொடுத்திருப்பார்கள்.
ஆனால், மேயர் மேயர் சைதை துரைசாமி அப்படி செய்யவில்லை. அதற்கு முந்தைய நடவடிக்கைகள் குறித்த ஃபைல்களையும் கொண்டுவரச் செய்து ஆய்வு செய்தார். அந்த நேரத்தில்
அந்தக் கோப்புகளை சைதை துரைசாமி முழுமையாக ஆய்வு செய்தார். அப்போது ஓர் உண்மை தெரியவந்தது. அதாவது அந்த திருமண மண்டப இடத்தை முன்பு சென்னை மாநகராட்சிதான், வீட்டுவசதி வாரியத்திற்குக் கொடுத்திருக்கிறது. அப்போது மாநகராட்சி கொடுத்த இடத்திற்கு வீட்டு வசதி வாரியம் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
ஆனால் இதைப்பற்றி எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், வீட்டு வசதி வாரியத்திற்கு பணம் கொடுப்பதற்கு முந்தைய மேயர் கடிதப் போக்குவரத்து செய்திருக்கிறார்.
அப்படியென்றால், மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தைத் திரும்பப்பெறுவதற்கு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு எந்தப் பணமும் கொடுக்காமல், அந்த இடத்திற்கு தடையின்மைச் சான்று வாங்கி 4 கிரவுண்டு இடத்தில் மாநகராட்சியின் சார்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார்.
மாநகராட்சியின் சொத்தைப் பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் கொடுக்கலாம் என்று மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய மேயரின் நிர்வாக லட்சணத்தை மேயர் சைதை துரைசாமி அம்பலப்படுத்தினார்.
நிர்வாக முடிவு எடுக்கும்போது மிகவும் தெளிவாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார்.
அதனால்தான் 5 ஆண்டு காலம் சைதை துரைசாமி பதவியில் இருந்தபோது, யாரும் ஒரு குற்றச்சாட்டும் சொல்லிவிட முடியாத அளவுக்கு திறமையாகவும் நேர்மையாகவும் பணியாற்ற முடிந்தது.
- நாளை பார்க்கலாம்.
