ஞானகுரு பதில்கள்
கேள்வி : இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வது எப்படி..?
ஞானகுரு :
வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. மூன்றே மூன்று இடங்களுக்கு சென்று வந்தால் வாழ்க்கை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
- அரசு மருத்துவமனை – ஒரே ஒரு நாள் அரசு மருத்துவமனையில் உட்பிரிவு நோயாளிகள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று வாருங்கள்
- சிறைச்சாலை – இங்கு செல்வதற்கு கெடுபிடிகள் இருக்கும். எனவே, சிறையில் இருந்து வெளியே வந்த நபர்களிடம் உள்ளே என்னவெல்லாம் நடக்கிறது என்பதைக் கேட்டறியுங்கள்.
- சுடுகாடு – ஒரு நாள் முழுவதும் இடுகாட்டிற்கு யாருடைய உடல்கள் எல்லாம் வருகின்றன என்று வேடிக்கை பாருங்கள்.
இந்த மூன்று இடங்களில் கிடைத்த அனுபவங்களை உங்கள் வாழ்க்கைக்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் சிறப்பான வாழ்க்கையில் இருப்பதை உணர்வீர்கள். இதுவே, மகிழ்ச்சி.
