விஜய் ஆட்சியில் ஜாலியான கற்பனை

புதுப்புது சட்டங்கள்

ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவுடன் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். முதல்வர் ஆகலாம். விதவிதமாக சட்டம் போடலாம். அப்படி விஜய் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் உத்தரவு போடுவார் என்பதற்கு ஒரு ஜாலியான கற்பனை

  1. சினிமா பார்ப்பது கட்டாயமாக்கப்படும். தினமும் சினிமா பார்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகை வழங்கப்படும்.
  2. பள்ளிக்கூட பாடபுத்தகத்தில் சினிமா ஒரு பாடமாக சேர்க்கப்படும். விஜய் வாழ்கை வரலாறு தன்னம்பிக்கை வரலாறாக சேர்க்கப்படும்.
  3. தமிழகம் முழுக்க விஜய் நடித்த கதாபாத்திரங்களுக்கு சிலை வைக்கப்படும்.
  4. பரீட்சையில் பஞ்ச் டயலாக் கட்டாயமாக்கப்படும்.
  5. ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்கள் வணக்கம் வைக்க வேண்டும்.
  6. ஒவ்வொரு மாணவரும் பையில் விசில் வைத்திருக்க வேண்டும். விசில் போட்டிகள் நடத்தப்படும்.
  7. குழந்தைகளுக்கு சுறா, பிகில், போக்கிரி, மெர்சல், கில்லி, தெறி ஆகிய பெயர்கள் வைப்பது ஊக்குவிக்கப்படும்.
  8. ஓட்டு போடுவதற்கு 18 வயது கட்டுப்பாடு தளர்த்தப்படும். ஆரம்பப்பள்ளியில் சேர்ந்தவுடன் 5 வயதுக் குழந்தைக்கு ஓட்டுரிமை வழங்கப்படும்.
  9. பெண்களுக்கு தனியே ஒரு படை உருவாக்கப்படும். அந்த படையின் தளபதியாக த்ரிஷா இருப்பார்.
  10. சினிமா பாடலுக்கு நடனம் கற்றுத்தருவதற்கு பயிற்சிக்கூடங்கள் எல்லா ஊரிலும் நடத்தப்படும்.
  11. எதிர்க்கட்சியினர் தவறாக குற்றம் சாட்டினால் விசாரணை இல்லாமல் விஜய் கையால் சுட்டுக் கொலை செய்யப்படுவார்.
  12. பிள்ளைகளுடன் சண்டை போடும் அம்மா, அப்பாக்கள் வேறு மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
  13. பெண்கள் விவாகரத்து கேட்பது தடை செய்யப்படும்.
  14. ஆண்களும் பெண்களும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்று சட்டம் கொண்டுவரப்படும்.
  15. சிகரெட், மது போன்ற பொருட்கள் புனிதமானவையாக கருதப்படும். இதற்கு தடை போடும் பெற்றோர் மீது வழக்கு போடப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுவார்கள்.

இப்படி ஒரு ஆட்சியைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. எப்படியாவது தளபதியை ஜெயிக்க வைச்சுடுங்கப்பா…

Leave a Comment