வாழ்வை மாற்ற ஒரு சொல் போதும்

சொல்லிப் பழகுங்கள்.

வாழ்வை மாற்றியமைப்பதற்கு ஒரே ஒரு வார்த்தை போதும். அந்த வார்த்தை மனிதருக்கு நிம்மதி, மகிழ்ச்சி, மனநிறைவு எல்லாம் தரும். அப்படிப்பட்ட மந்திரச் சொல் என்ன தெரியுமா..?

போதும். ஆம். போதும் என்பது மகத்தான மந்திரச்சொல்.

வயிறு நிறைவதற்கு முன்பே போதும் என்று சொல்லிப் பழகுங்கள், ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தூங்கியது போதும் என்று சீக்கிரம் எழுந்தரிச்சுப் பாருங்க. அன்றைய தினம் நிறைய வேலை பார்க்க முடியும்.

செல்போன் போதும் என்று அணைத்து வையுங்கள், வீட்டில் உறவு சுமுகமாக இருக்கும்.

போதையில் விழுந்தது போதும் என்று முடிவெடுத்து கெட்டபழக்கங்களைத் தடுத்து நிறுத்துங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

புதிய வாகனம் வேண்டாம், இருப்பதே போதும் என்று நினைத்தால் பணம் மிச்சமாகும்.

பேசியது போதும் என்று வாயை மூடிக்கொண்டு இருந்தால் யாரிடமும் சண்டை வராது.

சேமிப்பு போதும் என்ற மனநிலை வந்துவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி வந்துவிடும்.

அடுத்தவருக்காக வாழ்ந்தது போதும் என்ற தெளிவு வந்துவிட்டால், வாழ்க்கை இனிமையாகிவிடும். தீய பழக்கங்கள் மட்டுமின்றி நல்ல பழக்கங்களுக்கும் போதும் என்று சொல்லிப் பழகுங்கள். அன்பு, பாசம், இரக்கம், கோபம், காதல், காமம், வன்மம் என எல்லாவற்றிலும் போதும் என்று சொல்லுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment