இதுதான் லக்கி
ஆஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பொண்ணும் வேண்டும் என்பதுதான் பெரும்பாலான தம்பதியின் கனவு. ஆனால் இன்றைய பொருளாதார சூழலில் ஒற்றைக் குழந்தையே போதும் என்றாகிவிட்டது.
ஒற்றைக் குழந்தை அல்லது ஆண் மற்றும் பெண் குழந்தை அல்லது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் வீட்டைவிட, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமாக இருக்கிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்காக இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
என்ன பிளஸ்
இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் எல்லாம் அடிதடி அமோகமாக இருக்கும். காரணம் இருக்கிறதோ இல்லையோ, இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள்.
அதேநேரம், ஒரு வீட்டில் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருந்தால் அந்தக் குழந்தைகள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடுவார்களாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள்.
பொறுப்பு
அதேபோல பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அடம் பிடிப்பதும் இல்லை. மூத்த குழந்தை ஒரு அம்மாவுக்கு உரிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறது. ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்துக்கொண்டு செய்கிறார்கள்.
அதனால் இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டதே என்று கவலைப்படாதீர்கள். வீட்டிற்கு சந்தோஷம் வந்திருக்கிறது என்று மகிழ்வு கொள்ளுங்கள்.
