ஞாயிறு மந்திரச்சொல்
நம்பிக்கை எனும் வார்த்தை ஒரு சொல் அல்ல, ஒரு சக்தி.
ஒரு விவசாயி விதை விதைத்தவுடன் விளைச்சலை பார்க்க முடியாது.
ஆனால் அவர் நம்பிக்கையோடு செய்கிறார். மழை வரும் என்று நம்புகிறார்.
பயிர் வளரும் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கையே தொடர்ந்து உழைக்க வைக்கிறது.
அதேபோல் வாழ்க்கையிலும் நாம் உடனடி முடிவுகளை எதிர்பார்க்க முடியாது.
நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் நம்பிக்கை இருந்தால் அந்த நேரம் வரையிலும் காத்திருக்க முடியும்.
நம்பிக்கை என்பது மனிதனை உயிரோடு வைத்திருக்கும் மருந்து. அது மன அழுத்தத்தை குறைக்கும். அது மனதிற்கு அமைதியை தரும். அது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்க உதவும்.
நம்பிக்கை உள்ள மனிதன் ஒருபோதும் தனியாக உணரமாட்டார். அவருக்கு அவரே துணையாக இருப்பார். மனமே அவரை உற்சாகப்படுத்தும்.
நம்பிக்கை என்பது ஒரு தீப்பொறி. அதை பாதுகாக்க வேண்டும்.அதை வளர்க்க வேண்டும். அதை அணைய விடக்கூடாது.
