பெண்கள் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய பழம்

பப்பாளி ஆச்சர்யம்

பழங்கள் என்றாலே அனைவரும் சாப்பிடக்கூடியவை என்றே சொல்ல வேண்டும். அதுதான் உண்மை. அதேநேரம், பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அதிக நன்மைகள் தரக்கூடிய பழம் ஒன்று இருக்கிறது.

ஆம், அதுதான் பப்பாளி. இந்த பழத்தில் பெண்கள் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று பல மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

அழகுடன் ஆரோக்கியம்

மேலும் தாய்ப் பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய சத்துக்களைக் கொடுக்கிறது. பப்பாளி சாப்பிட்டால் பார்வை சக்தியும் அதிகரிக்கிறது.

பெண்களின் அழகை அதிகரிக்கவும் பப்பாளி பயன்படுகிறது. பழுத்த பப்பாளியின் சதைப் பகுதியை முகத்தில் பூசி அரை மணி கழித்துக் கழுவினால் பளீச்சென முகம் மாறிவிடும். சரும சுருக்கம், படை போன்ற தோல் நோய்கள் நீங்கும். பப்பாளிக் காயை கூட்டு செய்து சாப்பிட்டால் குண்டு உடம்பு குறையத் தொடங்கும்.

குழந்தைக்கும் ஏற்றது

குழந்தைகளுக்கு தொடர்ந்து பப்பாளி கொடுத்துவந்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். எலும்பு, பல்லும் பலப்படும். நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும்.

அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்பும் பெண்கள் பப்பாளி பழத்தை மறக்கவேண்டாம்.

Leave a Comment