ஷாப்பிங் சீக்ரெட்
டென்ஷனாக இருக்கும் நேரத்தில், ரொம்பவும் போர் அடிக்கும் நேரத்திலும் என்ன செய்வது என்று புரியாமல் பலரும் தடுமாறுகிறார்கள். எப்படி நேரம் போக்குவது என்று தெரியாமல் நேரம் கெட்ட நேரத்தில் யாருக்காவது போன் செய்கிறார்கள். அதன் மூலம் கூடுதல் டென்ஷன் ஆகிறார்கள்.
இந்த பிரச்னையைத் தீர்க்க எளிய வழி ஒன்றை உளவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதாவது, ஒரு ஷாப்பிங் ஜாலியாகப் போயிட்டு வாங்க. மனசு சந்தோஷாகிவிடும், டென்ஷனும் போய்விடும் என்கிறார்கள்.
செலவு டென்ஷன்
ஷாப்பிங் போவது என்றாலே எக்கச்சக்கமாக செலவாகும் என்றும் அதனால் கூடுதலாக டென்ஷன் வரும் என்றும் அஞ்சுகிறீர்களா..?
செலவில்லாமல் ஷாப்பிங் செய்யலாம். ஆம், ஒரே ஒரு சாக்லேட் வாங்குவதற்கு பரபரப்பாக இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட் செல்லுங்கள். அங்கே நிதானமாக சுற்றிப் பார்த்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த ஒரு சாக்லேட் மட்டும் நிதானமாக தேர்வு செய்யலாம்.
கட்டுப்பாடு முக்கியம்.
ஷாப்பிங் போகும் நேரத்தில், கண்டதையும் பார்த்ததும் வாங்குவதற்கு ஆசை வரும். எனவே, செலவைத் தவிர்ப்பதற்கு கார்டு கொண்டுபோக வேண்டாம். செல்போனில் இருக்கும் கூகுள் பே போன்றவைகளை பயன்படுத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
பணமும் கொஞ்சமாக கொண்டு செல்லுங்கள். என்ன வாங்க வேண்டும் என்று ஆசைப்படுறீங்களோ அந்த அளவுக்கு மட்டும் பணம் கொண்டுபோனால் போதும்… ஜாலியா இருக்கும். மனசும் லேசாகிவிடும் என்கிறார்கள்.
பரிசோதித்துப் பாருங்கள்.
