மண் பானையை மறக்காதீங்க
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் உடல் சூடாகி… தாகம் எடுக்கும் நேரத்தில் எல்லாம் தண்ணீர் குடிக்க ஆசை வரும். அதுவும் ஜில்லென்று குடிக்கத்தான் பிடிக்கும்.அதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டில், தண்ணீர் பாக்கெட் அல்லது குளிர் பானங்களை உட்கொண்டால், உடனே சளி பிடித்துக்கொள்ளும், தலைவலியும் வரலாம்.
இதுபோன்ற தொந்தரவு இல்லாமல், நிம்மதியாக ஜில்லென்று தண்ணீர் குடிக்க ஆசைப்படுகிறீர்களா?
மீண்டும் பழைய காலத்துக்குச் செல்லுங்கள். ஆம், நம் முன்னோர் குடித்தது போல் மண் பானையில் தண்ணீர் பிடித்து வையுங்கள். மண் பானை தண்ணீர் மிதமான குளிர்ச்சியுடனும் சுவையாகவும் இருக்கும்.
மண் பானையில் கண்களுக்குத் தெரியாத மிக நுண்ணிய துளைகள் இருப்பதால், தண்ணீர் கசிந்து பானையின் மேற்பரப்பில் படியத் தொடங்கும். வெப்பமானது, பானையின் வெளியே படிந்திருக்கும் நீரை மட்டுமே ஆவியாக்குதால்… பானையின் உள்ளே தண்ணீர் குளுகுளூவெனவே இருக்கும். உடலுக்கும் நன்மை தரும்.
