ஞானகுரு பதில்கள்
கேள்வி ; பணம் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறேன். இந்த சிக்கலில் இருந்து மீள்வது எப்படி..?
- பி.கணேசமூர்த்தி, முத்தால்நகர்.
ஞானகுரு :
பொருளாதாரச் சிக்கல் இல்லாத மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப பொருளாதாரச் சிக்கலை உருவாக்கிக்கொண்டு அவஸ்தைப்படுகிறார்கள். மாத சம்பளத்துக்காரர் இ.எம்.ஐ. கட்டிவிட்டு மீதி நாட்களை கடன் வாங்கி ஓட்டுகிறார். வியாபாரத்தை விஸ்தீரணம் செய்துவிட்டு தொழிலதிபர்கள் வங்கி லோனுக்கு அலைகிறார்கள்.
அம்பானி, அதானி என்றாலும் பொருளாதாரச் சிக்கல் இருந்துகொண்டே இருக்கும். இந்த சிக்கலில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. எதிர்த்துப் போராட வேண்டும். வரவுக்குள் செலவை கொண்டுவாருங்கள் அல்லது செலவுக்கு அதிகமாக சம்பாதியுங்கள். இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
