நல்ல நண்பர் என்றால் கர்ணன்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி :   கர்ணன் போன்று நல்ல நண்பர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..?

  •  என்.பரந்தாமன், சென்னை.

ஞானகுரு :

இதிகாசங்களை ரசிக்கலாமே தவிர நிஜ வாழ்க்கைக்குப் பொருத்திப் பார்க்கக்கூடாது. இதிகாசப்படி கர்ணன் நல்ல நண்பன் அல்ல.  நல்ல விசுவாசி மட்டும் தான்.

அரச சபையில் பாஞ்சாலியின் சேலை  உரியப்பட்ட தருணத்தில், அதை தவறு என்று  தடுத்திருக்க வேண்டும். பாண்டவர்களுக்கு தனி நாட்டை பிரித்துக்கொடுப்பதே தர்மம் என்று துரியோதனனுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும். பாண்டவர்களில் தானே மூத்தவன் என்று தெரியவந்ததும் துரியோதனனிடம் அதை தெரிவித்திருக்க வேண்டும்.

முகத்துக்கு நேராக தவறுகளை சுட்டிக் காட்டுபவனே உண்மையான நண்பன். அரச பதவி கொடுத்த ஒரே ஒரு காரணத்துக்காக துரியோதனன் செய்த தவறுகளுக்கு எல்லாம் கர்ணன் உடந்தையாக இருந்தான். எனவே, கர்ணனை போல் ஒரு நண்பர் உங்களுக்கு வேண்டாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment