பெற்றோர் செய்யும் மோசமான தப்பு எது?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் மோசமான தவறு என்ன..?

  • எம்.ஷோபா, வாணியம்பாடி.

ஞானகுரு ;

டீன் வயதில் ஆண் பிள்ளைக்கு ரேஸ் பைக் வாங்கித்தருவதும் பெண் பிள்ளைக்கு பியூட்டி பார்லர் அறிமுகம் செய்வதும் ஆபத்தான செயல். மாணவப் பருவத்தினர் மனதில் இருக்கும் உறுதி உடலுக்கு இருக்காது.

ரேஸ் பைக் வேகத்தையும் ஆற்றலையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. தினம் ஒரு மாணவராவது பைக் விபத்தில் உயிர் இழக்கிறார் என்றும் தெரிந்தும், நிறைய பெற்றோர்கள் வாங்கித் தருவது பொறுப்பற்ற செயல். தங்கள் பிள்ளையின் உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்பவர்கள் உயிருக்கும் இவர்கள் எமனாக மாறுகிறார்கள்.

பெண் பிள்ளைகளுக்கு இயற்கையே அழகு என்று சொல்லி வளர்க்க வேண்டும். தலைமுடி, புருவம், இமைகள், உதடுகள் எல்லாவற்றையும் செயற்கையாக மாற்றுவது ஆபத்தான பழக்கம். அழகுப் பொருட்கள் மீது நம்பிக்கை வைக்கும் பெண்ணுக்கு தன்னம்பிக்கை குறைந்துவிடும்.

அழகு என்பது உடல் ஆரோக்கியத்திலும் நேர்த்தியான ஆடைகளிலும் இருப்பதே போதும் என்று சொல்லி வளர்ப்பதே நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.   

Leave a Comment