வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டும்?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : என்னிடம் செல்வம் குறைவாக இருக்கிறது. இதை மட்டும் வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ முடியுமா..?

  • பி.சாம்ராஜ், மேகமலை.

ஞானகுரு :

ஒருவருக்கு எவ்வளவு செல்வம் தேவைங்கிறதுக்கு தெளிவான வரையறை கிடையாது. குறைவு, அதிகம் என்பதெல்லாம் அவங்கவங்க மனதில் தான் இருக்கிறது. அதேநேரம்,  குறைவிலும் நிறைவை காண முடியும். எப்படி தெரியுமா? கீழே இருப்பவர்களைப் பாருங்கள்.

உங்களால் ஆசைப்பட்ட மாதிரி சாப்பிட முடியாமல் இருக்கலாம். ஆனால் இந்த உலகில் சாப்பாடு கிடைக்காத மனிதர்களும் இருக்கிறார்கள். உங்கள் வீடு சின்னதாக இருக்கலாம். ஆனால், வீடு இல்லாமல் ரோட்டில் ஏராளமான மனிதர்கள் வாழ்கிறார்கள்.

உங்களுக்கு நோய் துன்பமாக இருக்கலாம். ஆனால், சிகிச்சைக்கு வழியில்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்கள் வேலை கடினமாக இருக்கலாம். ஆனால், அந்த வேலை கூட கிடைக்காமல் நிறைய மனிதர்கள் அலைகிறார்கள். உங்கள் சேமிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால், கழுத்து வரை கடனுடன் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்படி உலகத்தை கீழே பார்க்கத் தொடங்கினால் உங்களிடம் நிறைய செல்வம் இருப்பதை காணலாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment