அதிர்ச்சி தரும் உண்மைகள்
ஆண் ஆதிக்கம் காரணமாக பெண்கள் காலம் காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேநேரம் சில விஷயங்களில். ஆண்களை விட பெண்கள் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதும் உண்மை. அதற்கு உதாரணமான ஆறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- கோபம் வந்தால் ஆண் சண்டை போடுவான், நேரடியாகத் திட்டுவான். ஆனால் பெண், கோபத்தை வெளிப்படையாகக் காட்ட மாட்டார், ஜாடை மாடையாகத் திட்டுவார்.
- தெரிந்த நபர்கள் வாழ்க்கையில் முன்னேறினால் ஆண்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பெண்கள் பொறாமைப்படுவார்கள். அதுபோல் முன்னேறுவதற்குத் தெரியவில்லை கணவரை விமர்சனம் செய்வார்கள்.
- சாதாரண விஷயத்தையும் ரகசியம் போன்று பாதுகாப்பது ஆணின் குணம். எத்தனை பெரிய ரகசியம் என்றாலும், அதை சாதாரணமாக அடுத்தவர்களிடம் தெரிவிப்பது பெண்ணுக்கு வழக்கம்.
- அம்மா, மனைவி, பிள்ளைகளிடம் ஆண் தன் பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால், பெண் பாசத்தைக் காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்து தனக்குத் தேவையான காரியத்தை சாதித்துக் கொள்வார்.
- தான் விரும்பும் பெண்ணை தன் நண்பனும் விரும்புவது தெரிந்தால், ஆண் அந்த பெண்ணுடன் உறவைத் தொடர்வதற்குத் தயங்குவான். இந்த நிலையில் பெண் இருந்தால், உடனடியாக ஓடிப்போய் தன் காதலை சொல்லி நிறைவேற்றிக் கொள்வார்.
- தன்னுடைய அழகு, இளமை குறித்து ஆண் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அழகு குறைந்துவிட்டதாக பெண் காலம் முழுக்க புலம்பிக்கொண்டு இருப்பார்.
ஆண்களைப் போலவே பெண்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காமல், அவர்களுடைய குணத்தைப் புரிந்துகொண்டால் வாழ்க்கை சுலபமாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
