சிம்பிள் ரூட் மேப்
கடவுளை கண்டுபிடிக்கும் ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால், அதற்கு வழி தெரியாமல் தவிக்கிறார்கள். கடவுளை கண்டுபிடிக்கும் சுலபமான வழியை இந்த நாட்டுப் புறக் கதையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் புமியில் செடி, கொடி, மீன்கள், பறவை, விலங்குகளை படைத்து முடித்தார். கடைசியாக மனிதனைப் படைத்தார். மற்ற உயிரினம் கடவுளை தொந்தரவு செய்யவில்லை. அதனதன் வாழ்க்கையை வாழ்ந்துவந்தன.
ஆனால், மனிதனிடம் இருந்து தினமும் ஏகப்பட்ட கம்ப்ளைண்ட் வந்தன. ஏனென்றால் அப்போது எல்லோராலும் கடவுளைக் காண முடிந்தது. ’எனக்கு பெரிய வீடு வேண்டும், இப்போது மழை வேண்டும், எனக்கு இரண்டு மனைவி வேண்டும், எனக்கு நல்ல உணவு வேண்டும் என்று ஆளுக்கு ஒரு கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.
இதனை தாங்க முடியாமல் கடவுள் ஒளிந்துகொண்டார். அவர் எங்கே ஒளிந்தாலும் மனிதர்கள் தேடிக் கண்டுபிடித்துக் கேட்டார்கள். மனிதரிடம் இருந்து எப்ப்டி தப்புவது என்று யோசித்தவருக்கு சட்டென ஒரு ஐடியா வந்தது. உடனே அங்கே போய் அமர்ந்துகொண்டார். மனிதரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அப்படி கடவுள் ஒளிந்துகொண்ட இடம் எது தெரியுமா..? அது, மனிதரின் மனசு. ஆம், இப்போதும் கடவுள் மனிதரின் மனதில் இருக்கிறார். இதையே சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். தேடினால் நீங்களும் கண்டுபிடிக்கலாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
