திருமணத்துக்குத் எத்தனை தகுதிகள்?

அவசரம் ஆபத்து

21 வயது வந்தவுடன் ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். வயது மட்டும் போதுமான தகுதி அல்ல. வேறு எப்படிப்பட்ட தகுதிகள் வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

  • விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை இருக்க வேண்டும்.
  • மன்னிக்கும் மனப்பான்மை அவசியம்.
  • சுயநலமாக இருப்பது வேலைக்கு ஆகாது.
  • தான் விரும்புவது மட்டும் நடக்க வேண்டும் என்று அடம் பிடிக்கக்கூடாது.
  • சுயமாக முடிவு எடுக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
  • செலவழிக்கும் பணத்துக்கு கணக்கு காட்ட வேண்டும்.
  • விருப்பமில்லை என்றாலும் உறவினர்களை மதிக்க வேண்டும்.
  • தவறு செய்தால் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • ஈகோ இருக்கவே கூடாது.

இத்தனை பண்புகளையும் வளர்த்துக்கொண்டால் திருமணம் சுகமான பயணமாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment