தியானம் என்பது மாய வலை

சிக்கி ஏமாறாதீர்கள்.

உடல், மனம் ஆரோக்கியத்திற்கு தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றை சிலர் பரிந்துரைக்கிறார்கள். அதுவும், தியானம் பற்றி மிகவும் உயர்வாகப் பேசுகிறார்கள். தொடர்ந்து தியானம் செய்து குண்டலினி சக்தி அடைந்துவிட்டால் பேராற்றல் கிடைத்துவிடும் என்று சொல்வார்கள்..

தியானம் சொல்லித் தருவதற்கு நிறைய பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. வியாதி, நரை, மூப்பு, மரணம் இல்லாத அஸ்வினி சகோதர்கள்தான், பிரான, அபானன் என்ற வாயுக்களாக மூச்சுக் காற்றில் இயங்குவதாகச் சொல்வார்கள். இடகலை, பிங்கலை, சூயகலை, சந்திரகலை, சுசூம்னை என்றெல்லாம் சொல்லி விதவிதமாக மூச்சுப் பயிற்சி கற்றுத் தருகிறார்கள். எத்தனை தூரம் மூச்சு அடக்குகிறோமோ, அத்தனை தூரம் ஆயுள் கூடும் என்று சொல்வார்கள்.

இரண்டாவது நிலை, மூன்றாவது நிலை தியான பயிற்சி முடித்தால் உடல் அப்படியே மேலே எழும்பும், அதை நீங்களே உணர முடியும் என்று சொல்வார்கள். தியானம் பற்றி சொல்லப்படும் எல்லாவற்றையும் அப்படியே நம்பாதீர்கள். இயற்கையை மீறி மூச்சுப் பயிற்சி மூலம் யாரும் தங்கள் உடலை அந்தரத்தில் நிறுத்தியதே இல்லை. இது புரூடா என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நடை பயிற்சி, உடற்பயிற்சி போன்று மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம் போன்றவையும் சாதாரண பயிற்சிகள் மட்டுமே. எனவே, பொழுது போகவேண்டும் என்பதற்காக தியானம் செய்யலாம். ஆனால், இதனால் எந்த அற்புதமும் நடக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வதே உண்மையான தியானம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment