லட்சியத் தம்பதிக்கு 10 கட்டளைகள்

சிம்பிள் டிப்ஸ்

இன்று திருமணம் முடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. கணவன் – மனைவி ஒற்றுமையாக வாழ்வது அதை விட சிரமமாக இருக்கிறது. லட்சிய தம்பதியராக வாழ்வதற்கு ஆசைப்படுபவர்கள் 10 கட்டளைகளைக் கடைப்பிடித்தால் போதும்.

  1. உடல் ஆரோக்கியம், அழகு பாதுகாப்பதற்கு திருமணத்திற்குப் பிறகும் இருவரும் அக்கறை செலுத்த வேண்டும். பெண் குண்டாவதும், ஆண் தொப்பை போடுவதும் திருமண பந்தத்திற்கு பங்கம் விளைவிக்கின்றன.
  2. பழைய வாழ்க்கை, பழைய உறவு, பழைய நட்புகளை, கடந்தகாலத் தவறுகளை மறந்துவிட்டு, புதிய வாழ்க்கைக்கு மட்டும் உண்மையாக இருங்கள்.
  3. இரண்டு பக்க உறவுகளையும், நண்பர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகுங்கள். யாரையும் உயர்த்தவும் தாழ்த்தவும் வேண்டாம்.  
  4. சின்னச்சின்ன சண்டை. கருத்துவேறுபாடு வருவது சகஜம். இதை தம்பதியரே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். மூன்றாம் நபரை அனுமதிக்காதீர்கள்.
  5. யாரும், யாருக்கும் அடிமையாக இல்லாமல், நட்புடன் பழகுங்கள். பொது இடங்களில் உங்கள் துணையைப் பற்றி குற்றம் சொல்லாதீர்கள்.  
  6. எத்தனை பிஸியாக இருந்தாலும் இருவரும் பேசிக்கொள்வதற்கு தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்குங்கள்.  
  7. பணம் விஷயத்தில் ஒளிவு, மறைவு வேண்டாம். பண உதவி, கடன் போன்றவை ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் செய்யக்கூடாது.   
  8. யாருக்காகவும் யாரும் மாறவேண்டாம். பழக்கவழக்கங்களில் ஒரே நாளில் எந்த மாற்றமும் நிகழாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
  9. தினமும் ஒரு முறையாவது ஒருவரையொருவர் பாராட்டுங்கள். அவ்வப்போது பரிசு கொடுங்கள்.
  10. எந்த ஒரு எதிர்காலத் திட்டத்துக்காகவும் தாம்பத்திய உறவை தள்ளிப்போடாதீர்கள். விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் வாழ்க்கை சுலபமாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment