இவரை விட வலி தாங்க முடியுமா..?

துன்பம் ஒரு மாயை

தங்களுக்கு வரும் துன்பம் போன்று இந்த உலகத்தில் யாருமே வேதனைப்படுவதில்லை என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். அட்வைஸ் செய்வது ஈஸி, ஆனால் துன்பம், துயரத்தை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வேதனை புரியும் என்பார்கள்.

எந்த ஒரு துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வந்துவிட்டால், அதை சுமப்பது எளிது. இதற்கு உதாரணம் யார் தெரியுமா..? கர்ப்பிணிப் பெண்கள்.

ஆம், எந்த ஒரு மனிதரின் வலியும் வேதனையும் பெண்ணின் பிரசவ வலிக்கு இணையானது இல்லை.

கர்ப்ப காலத்தில் ஆசைப்படும் உணவுகளை சாப்பிட முடியாது. வாந்தி, மயக்கம் என்று பாடாய் படுத்தும். அதன் பிறகும், குழந்தைக்கு எந்த உணவு நல்லது என்று தேர்வு செய்து சாப்பிடுவார்களே தவிர, தங்களுக்கு விருப்பமானதை சாப்பிட மாட்டார்கள். வயிறு பெரிதாக வளர… வளர… அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரும். நிம்மதியாக புரண்டு படுக்கவும், தூங்கவும் முடியாது.

குழந்தைக்கு அசைவு இருக்கிறதா என்று அவ்வாப்போது கவனித்துக்கொண்டே இருப்பார்கள். எத்தனை வேதனை, வலி இருந்தாலும் சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள். பிரசவ வலியை Queen of Pain என்று அதாவது, வலிகளின் ராணி என்பார்கள். அதனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு மனிதரால் அதிகபட்சம் 45 டெல் அளவுக்கு வலியைத் தாங்க முடியும் என்பார்கள். ஆனால், ஒரு பெண் பிரசவத்தின்போது 57 டெல் வலியைக் கடக்கிறாள். இது, நம் உடலில் 20 எலும்புகள் ஒரே நேரத்தில் ஒருசேர உடையும்போது ஏற்படும் வலிக்கு இணையானது. இத்தனை சிரமப்பட்டு குழந்தை பெற்றுக்கொண்டு அதற்காக மகிழ்ச்சி அடைகிறாள்.

ஒரு பெண்ணின் பிரசவ வலியை விட எந்த வேதனையும் பெரிது இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உங்கள் துன்பத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment