ஏமாறுவது, ஏமாற்றுவது எது தவறு..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : ஏமாற்றுப் பேர்வழிகள் இருப்பதால்தானே மனிதநேயம் குறைகிறது?

  • சி.வாணி, கோவை.

ஞானகுரு :

தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக பிறரை ஏமாற்றுகிறார். பேராசைப்படுபவர் மட்டுமே ஏமாறுகிறார். ஒருவகையில் அவரும் ஒரு மறக்கமுடியாத பாடம் கற்றுக்கொடுக்கிறார். அதனால் ஏமாற்றுப் பேர்வழிகளும் ஆசிரியர்கள்தான்.

ஏமாறுவது தவறு அல்ல, தொடர்ந்து ஏமாறுவதே தவறு. ஏமாற்றுவதால் கிடைப்பது ஆதாயம் அல்ல, ஒரு நம்பிக்கை இழப்பு.

கேள்வி : முட்டுக்கட்டை விலக முயற்சி மட்டும் போதுமா?

  • ஏ.பழனிக்குமார், நெல்லை

ஞானகுரு :

வெறுமனே முயற்சி மட்டும் போதாது, பயிற்சியும் தன்னம்பிக்கையும் கூடுதலாக வேண்டும். அதைவிட அதிகமாகப் பொறுமை வேண்டும்.

கேள்வி : ஏன் துன்பம் வாழ்வில் வருகிறது?

  • எம்.பாண்டியம்மாள், ஶ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

துன்பம் என்பது உன் பார்வையில் மட்டுமே இருக்கிறது. பிரசவ வலி இன்று துன்பமாகத் தெரியலாம். ஆனால் பின்னர் நினைத்துப்பார்க்கையில் இன்பமாகத் தோன்றும். அதனால் நாளைய இன்பத்திற்கு இன்றைய முன்னோட்டமாக துன்பத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Comment