டீன் ஏஜ் காதலை சமாளிப்பது எப்படி..?

காதலுக்கு வேண்டாம் மரியாதை

ஒன்றாகப் படிக்கும் ஆண், பெண் பிள்ளைகள் காதலில் விழுவது டீன் ஏஜில் சகஜமான ஒன்று. இந்த நேரத்தில் பிள்ளைகளின் காதலைக் கண்டுபிடித்து அவர்கள் வழி தவறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது பெற்றோர் கடமை. காதலில் விழுந்த பிள்ளையை எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்.

  • காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் பிள்ளையை அடிப்பதும், கண்டிப்பதும் அவர்களுடைய காதலை பலமாக மாற்றுவிடும். ஆகவே, பெரிதாக ரியாக்‌ஷன் காட்ட வேண்டாம்.
  • டீன் ஏஜில் வரும் காதல் உண்மையல்ல, அதனால் மிகுந்த நம்பிக்கை வைத்து ஏமாற வேண்டாம் என்று அழுத்தமாகச் சொல்லுங்கள்.
  • யாரைக் காதலிக்கிறார் என்பதை அறிந்துகொள்ள கொஞ்சமும் ஆர்வம் காட்டாதீர்கள், வீட்டிற்கு அழைத்துவரவும் அனுமதிக்காதீர்கள்.  
  • படித்து முடித்து, சம்பாதிக்கும் வரை காதலிப்பதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்பதை திரும்பத்திரும்பச் சொல்லுங்கள்.
  • காதலுக்காக படிப்பை விட்டு ஓடியவர்கள் நல்லபடியாக வாழ்ந்தது இல்லை என்பதை உதாரணங்களுடன் விளக்குங்கள்.
  • ஹார்மோன் காரணமாக ஒழுக்கத்தில் தவறி விட்டால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டியிருக்கும், யாரும் உதவ மாட்டோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.  

எந்த வயதில் வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால், இந்த வயதில் மட்டுமே படிக்க முடியும். ஆகவே, படிப்பை முடித்துவிட்டு உன் விருப்பப்படி எதுவேண்டுமானாலும் செய் என்ற சுதந்திரத்தைப் பிள்ளைக்குக் கொடுங்கள். பிள்ளைகள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.    

Leave a Comment