காலை கண் விழித்ததும் செய்ய வேண்டியவை

சக்சஸ் மந்திரம்

காலை எழுந்ததும் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் திகழும். நாள் முழுவதும் இந்த உற்சாகம் தொடரவேண்டும் என்றால் உடனடியாக படுக்கையை விட்டு எழுந்தரிக்காமல் ஒரே ஒரு நிமிடம் மட்டும் இந்த விஷயங்களை செய்வதற்கு ஒதுக்குங்கள்.

  • இன்றைய தினம் நல்ல நாளாக இருக்கும் என்று வாய் விட்டுச் சொல்லுங்கள்.
  • நான் ஒரு முக்கியமான நபர், நான் ஒரு சிறந்த மனிதர் என்று சொல்லிக்கொள்ளுங்கள், அதை மனதார நம்புங்கள்.
  • எத்தனை எதிர்ப்புகள், தோல்விகள் வந்தாலும் சோர்வடைய மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • உடலே நண்பன். ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என் கடமை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
  • அன்றைய தினம் செய்யவேண்டிய முழு பணிகளையும் பட்டியல் போட்டு, எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்று மனதில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் நல்ல நாள் என்ற சிந்தனையுடன் புதிய நாளைத் தொடங்குங்கள். மகிழ்ச்சியுடன் வாழலாம்.

Leave a Comment