நிஜமான ஆச்சர்யங்கள்
இந்த பூமியில் பிறப்பு என்பது மனிதர்கள் கையில் இல்லை, இறப்பு என்பதும் அவர்கள் நினைப்பது போன்று நடப்பதில்லை. ஆனால், வாழ்க்கையை அவர்கள் விருப்பம் போல் வாழ முடியும். அதற்கு வழிகாட்டும் ஐந்து உண்மைகளை ஒருபோதும் மறக்கக் கூடாது.
- இந்த உடல் மட்டும் தான் உங்களுக்குச் சொந்தமானது. ஆரோக்கியம் இல்லையென்றால் எதையும் அனுபவிக்க முடியாது.
- பிறந்த எல்லோரும் மரணம் அடைவது உறுதி. பணம், செல்வாக்கு, புகழ் மூலம் மரணத்தைத் தடுக்க முடியாது.
- யாரும் யாருக்காகவும் படைக்கப்படவில்லை. நெருக்கமான உறவு என்றாலும் மரணம் அடைந்தவருக்காக யாரும் சாவதில்லை.
- இன்று இன்பம் தரும் காதல் நாளை துன்பம் தரலாம். ஆக, எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரம் இல்லை
- நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காகவும், நடந்துமுடிந்த செயலுக்கு வருந்துவதாலும் எதுவும் மாறப்போவதில்லை.
- இந்த நிமிடம் மட்டுமே நிஜமானது. ஆகவே, மகிழ்ச்சியாக வாழுங்கள்..
