லவ் ஃபார்முலா
ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் சம்பந்தப்பட்ட நபரைத் தவிர எல்லோரிடமும் அதை சொல்லிவிடுவார். அந்த பெண் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்வார். எனவே, ஆண் காதலில் விழுந்ததை எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஆனால், பெண் காதலில் விழுந்ததை என்பதை எப்படி கண்டுபிடிப்பது..?
- ஆணை நேரில் பார்க்கும்போது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும்.
- கண்களை நேரில் பார்த்துப் பேசுவதற்கு கூச்சப்படுவார். அதேநேரம், எங்கேயிருக்கிறார் என்று அடிக்கடி தேடிக்கொண்டு இருப்பார்.
- சம்பந்தப்பட்ட நபரின் குடும்பம், நண்பர்கள் என்று சகல விஷயங்களையும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்வார்.
- சமையல் தெரியாதவர் என்றாலும் ஏதேனும் புதிதாக சமைத்துக் கொண்டுவந்து கொடுப்பார்.
- வேறு ஒரு பெண்ணுடன் சிரித்துப் பேசுவதைப் பார்த்தால், கோபப்படுவார். என்ன பேசினீர்கள் என்று நிச்சயம் கேட்பார்.
- தோழிகள், உறவினர் யாராவது வந்தால் சந்தோஷமாக அறிமுகப்படுத்தி வைப்பார்.
- மற்றவர்கள் அழைப்பது போன்று இல்லாமல், தனக்கென்று ஒரு புது அடையாளத்துடன் அழைப்பார்.
- முதலில் மெசேஜ் செய்ய மாட்டார்கள். ஆனால், ஆண் அனுப்பியதுமே பதில் அனுப்பத் தொடங்கிவிடுவார்கள்.
செல்போன் மெசேஜில் சரளமாகப் பேசத் தொடங்கிவிட்டார் என்றால், அவர் காதலில் விழுந்துவிட்டார் என்று உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
