உறவுகள் வீட்டுக்கு வந்தால் வெறுப்பு..?

உளவியல் காரணங்கள்

உறவும் நட்பும் வாழ்வுக்கு முக்கியம் என்று மனிதர்கள் நினைத்த காலம் மாறிவிட்டது. உறவினர்களும் நண்பர்களும் வீட்டுக்கு வருவதைக் கூட இப்போது யாரும் விரும்புவதே இல்லை. ஏன் தெரியுமா..?

  • யாரும் யாரையும் எந்த நேரத்திலும் தொடர்புகொண்டு பேச முடியும். ஆகவே நேரில் சந்திப்பது அவசியமில்லை என்றே கருதுகிறார்கள்.
  • எல்லா தகவல்களும் இணையத்தில் பெற முடிகிறது. அதனால் நேரில் சந்தித்து ஆலோசனை செய்வதற்கு அவசியமில்லை என்று நினைக்கிறார்கள்.
  • சமூகவலைதளங்களில் குறுகிய நேரத்தில் நிறைய மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆகவே நிஜ மனிதர்களுடன் அதிக நேரம் செலவிட யாரும் விரும்புவதில்லை.
  • வீட்டுக்கு வருபவர்கள் தனி மனிதர் சுதந்திரத்தைக் கெடுப்பதாகவே நினைக்கிறார்கள்.
  • தேவை இருப்பவர்களே தேடி வருகிறார்கள் என்றே எல்லோரையும் நினைக்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினர் உறவையும் நட்பையும் வெறுக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் நிஜ மனிதர்களின் நெருக்கமும் பாசமும் அவசியம். ஆகவே, வீட்டுக்கு வருபவர்களை வரவேற்று பேசுங்கள். அதுவே, மகிழ்ச்சி.

Leave a Comment