ஆண்களின் 5 அச்சங்கள்
ஆண்களுக்கு மனைவி மீது எப்போதும் ஒரு அச்சம் இருந்துகொண்டே இருக்கும். ஏதேனும் காரணத்தால் தன்னை விட்டு மனைவி விலகிப்போக வாய்ப்பு உண்டு என்று சந்தேகப்படுகிறார்கள். மனைவி பற்றி இந்த ரகசியங்களை அறிந்துகொண்டால் ஆண்கள் தைரியமாக இருக்கலாம்.
- தான் விலகிப்போனதும் வேறு பெண்ணை கணவர் திருமணம் முடித்துக்கொள்வார் என்ற சூழ்நிலை இருந்தால், அந்தப் பெண் பிரிய மாட்டார்.
- மனைவிக்கு பிறர் முன்பு மதிப்பும் மரியாதையும் தரும் கணவனை விட்டு பெண் பிரிய மாட்டார்.
- குடும்பத்துக்கு கடுமையாக உழைக்கும் நேரத்திலும் மனைவிக்கு தினமும் நேரம் ஒதுக்கும் ஆணை பெண் பிரிய மாட்டார்.
- கணவர் நிச்சயம் சாதனை புரிவார் என்று நம்பும் பெண் விலகிச்செல்ல மாட்டார்.
- தனக்குத் தெரியாமல் கணவரிடம் நிறைய பணம், சொத்து இருக்கிறது என்று நம்பும் பெண் ஒருபோதும் விலக மாட்டார்.
குறிப்பாக கணவருக்கு தான் முக்கியமில்லை, தனக்கே கணவர் முக்கியம் என்று நினைக்கும் பெண் பிரியவே மாட்டார். ஆண்கள் அப்படிப்பட்ட குணங்களை வளர்த்துக்கொண்டால் போதும்.
