நல்ல அம்மாவுக்கு ஐந்து கட்டளைகள்

உறவுகள் உளவியல்

ஒவ்வொரு மனிதரையும் உருவாக்குபவர் அம்மா தான். அதற்காக பிள்ளைகள் காலம் முழுவதும் அம்மாவின் அடிமையாக இருப்பதில்லை. குறிப்பாக திருமணம் முடிந்த பிறகு அம்மாக்களை தள்ளி வைக்கிறார்கள். ஆகவே, அம்மாக்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஐந்து உண்மைகள் உள்ளன.    

  • மனைவிக்குத் தான் மகன் மீது முழு உரிமை உள்ளது, மனைவிக்கு முன்னுரிமை கொடுப்பதே நியாயம் என்பதை அம்மா உணர்ந்துகொள்ள வேண்டும்.
  • சம்பாதிக்கும் பணத்தை தன்னிடம் தரவேண்டும் என்றோ, கணக்கு காட்ட வேண்டும் என்றோ அம்மா எதிர்பார்க்கக் கூடாது.
  • வெளியிடங்களுக்கு மனைவியை கூட்டிச்செல்லவே மகன் விரும்புவான் என்பதைப் புரிந்து அம்மா விலகி நிற்க வேண்டும்.
  • மகன் குடும்பஸ்தனாக மாறிவிட்டதால், எல்லா விஷயத்தையும் அம்மாவைக் கேட்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
  • பாசத்தைக் காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்து காரியம் சாதிக்க நினைக்கக்கூடாது.

அம்மாக்கள் இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு விலகி நின்றால் மகனும் மருமகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அம்மா பக்குவமாக நடந்துகொள்கிறார் என்று பாராட்டுவார்கள்.

Leave a Comment