காதலிப்பதற்கு 5 தகுதிகள்

லவ் சக்சஸ் ஃபார்முலா

ஆணாகவும், பெண்ணாகவும் இருந்தாலே காதல் செய்ய முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள் என்பது போன்று கண்ணால் கண்டதும் காதல் வந்துவிடும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், தகுதியுடன் வரும் காதல் மட்டுமே தப்பிப் பிழைக்கும்.

  1. உடலை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருப்பதே காதலிப்பதற்கு முதல் தகுதி.  
  2. தன்னையும், நம்பி வருபவரையும் காப்பாற்றும் அளவுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு காதலுக்கு மிகவும் முக்கியம்.
  3. காதல் செய்பவரிடம் இருக்கும் பலவீனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் காதலுக்கு முக்கியத் தகுதி.
  4. எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் சமாளித்து நிற்கும் தைரியம் காதலுக்கு முக்கியமான தகுதி.
  5. தான் விரும்பும் நபர் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக காதலையும் தியாகம் செய்யும் அளவுக்கு டேக் இட் ஈஸி மனப்பான்மை இருத்தல் வேண்டும்.

காதல் ஒரு முறை மட்டுமே வரும் என்பது உண்மையில்லை. ஆகவே, தகுதிகளை வளர்த்துக்கொண்டு காதல் செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment