சக்சஸ் நிச்சயம்
பெரும்பாலான வீடுகளில் செல்போனை பிள்ளைகள் கையில் இருந்து மீட்பதற்குத்தான் அதிக சண்டை நடக்கிறது. பெற்றோரை விட செல்போனே முக்கியம் என்று பிள்ளைகள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளுக்கு செல்போன் நாகரிகம் கற்றுத்தருவது மிகவும் முக்கியம்.
- குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் பேசுவதற்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும். யாருடனும் மணிக்கணக்கில் அரட்டை அடிக்காதீர்கள்.
- இரவு 9 மணிக்குப் பிறகு செல்போன் பயன்பாடு இல்லை என்ற நிலையை வீட்டில் உருவாக்குங்கள்.
- ஷெல்ஃபி எடுப்பது, ஸ்டேட்டஸ், சமூகவலைதளங்களில் நாட்டம் காட்டாதீர்கள், பிள்ளைகளையும் ஊக்குவிக்காதீர்கள்.
- தினமும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செல்போன் பயன்பாடு என்பதில் எதற்காகவும் விதிவிலக்கு வழங்காதீர்கள்.
- உறவினர்கள், நண்பர்களிடம், ‘எங்கள் பிள்ளை குறைந்த நேரமே செல்போன் பயன்படுத்துகிறார்’ என்று பெருமையாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். அதை உண்மையாக்குவதற்குக் குழந்தை விரும்பும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கட்டும்.
செல்போன் தீமைகள் குறித்து குழந்தைகளுக்குப் புரிய வைத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.
