சக்சஸ் மந்திரம்
வாழ்க்கையில் வெற்றி அடைந்த சாதனையாளர்கள் அனைவருமே கடுமையாக உழைத்தே லட்சியத்தை அடைந்திருக்கிறார்கள். அதிர்ஷ்டத்தால் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு லட்சியத்தை வகுக்க வேண்டும்.
- லட்சியம் என்பது அடையக்கூடிய தெளிவான குறிக்கோளாக இருக்க வேண்டும். அடுத்தவரைப் போன்று முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது குறிக்கோள் அல்ல.
- லட்சியத்தை அடைவதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- எந்த வழியில் லட்சியத்தை அடைவது என்று ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும். பிறர் ஆலோசனை கேட்டாலும் முடிவு சொந்தமாக இருக்க வேண்டும்.
- லட்சியத்திற்கான மாற்றத்தை ஏற்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்துகொண்டு சினிமா நடிகராக முடியாது. சென்னைக்குப் பயணிக்க வேண்டும்.
- லட்சியத்தை அடைவதற்குப் பொறுமை அவசியம். சரியான தருணத்திற்குக் காத்திருக்கக் கற்றுக் கொள்பவரால் மட்டுமே லட்சியத்தை அடைய முடியும்.
கடுமையாக உழைப்பதால் மட்டும் லட்சியத்தை அடையமுடியாது, புத்திசாலித்தனத்துடன் உழைப்பவராலே லட்சியத்தை அடையமுடியும் என்பதைப் புரிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்
