மரணம் பற்றி 5 ரகசியங்கள்

வாழ்க்கை அதிசயம்

பிறந்த மனிதர்கள் அனைவருமே தினமும் மரணம் நோக்கியே பயணம் செய்கிறார்கள். மரணம் நிச்சயம் என்பதை ஒவ்வொரு கணமும் ஞாபகம் வைத்துக்கொள்பவரால் மட்டுமே வாழ்க்கையை ரசித்து வாழ முடியும்.

  1. மாபெரும் தலைவர், மிகப்பெரும் கோடீஸ்வரர், மருத்துவ விஞ்ஞானி, மகா ஞானி என்றாலும் மரணத்திடம் இருந்து யாரும் தப்பவே முடியாது.
  2. நல்லவர், கெட்டவர், நோயாளி, ஆரோக்கியமானவர், முட்டாள், அறிவாளி, சிறியவர், முதியவர் என்ற பாகுபாடு மரணத்துக்கு இல்லை.
  3. முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு மரணம் வருவதில்லை. நோய், விபத்து, இயற்கைப் பேரழிவு போன்ற காரணங்கள் இல்லாமலும் மரணம் நிகழலாம்.
  4. மருத்துவமனைக்குப் போனால் உயிர் பிழைக்கலாம் என்பது உண்மை இல்லை. நிறைய மரணங்கள் மருத்துவமனையில் தான் நிகழ்கின்றன.
  5. தியானம், பிரார்த்தனை, பூஜை மூலம் மரணத்தை வெற்றியடைய முடியாது.

வாழ்க்கையின் மறு பக்கமே மரணம் என்பதைப் புரிந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.  

Leave a Comment