ஐந்து வயதுப் பிள்ளைக்கு 5 விஷயங்கள்

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளுக்கு வாழ்க்கை நீதி என்று எதையும் தனியே கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர்கள் வாழ்ந்து வழி காட்ட வேண்டும்.

  1. பிள்ளைகள் முன்பு பொய் பேசாமல் வாழுங்கள். வீட்டில் இருந்துகொண்டே வெளியே இருப்பதாக செல்போனில் பொய் சொல்வதைப் பார்த்தே, பிள்ளைகள் பொய் சொல்லப் பழகுகின்றன.
  2. நீச்சல் பழகுவதால் பிரயோஜனம் இல்லை என்று கருதாமல் இந்த வயதிலேயே நீச்சல் கலையை அறிமுகம் செய்யுங்கள். உடற்பயிற்சியாக மட்டுமின்றி தன்னம்பிக்கை டானிக்காகவும் திகழும்.  
  3. உணவு மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும் என்பதையும் சாப்பிட்டவுடன் தட்டு சுத்தம் செய்வதையும் பழக்கப்படுத்துங்கள். 
  4. அடம் பிடித்தால் கேட்டது கிடைத்துவிடும் என்ற மனப்பான்மையை பிள்ளைக்கு உருவாக்காதீர்கள். முடியாது என்று உறுதியுடன் சொல்லிப் பழகுங்கள். குழந்தை வளர்ப்பில் இந்த ஐந்தையும் கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
  5. கார், டூ வீலர் இருந்தாலும் அரசு பஸ், டிரெயின், ஆட்டோ போன்ற பொதுப்போக்குவரத்தில் கூட்டிச்செல்லுங்கள். பல்வேறு வாழ்க்கைத் தரத்தில் மனிதர்கள் வாழ்வதைப் புரிந்துகொள்வார்கள்

Leave a Comment