குட்டி டாக்டர்
மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே வருகிறது. ஏஐ காரணமாக ஏகப்பட்ட புரட்சியே நடக்கிறது. அப்படி மாறியிருக்கும் சில புதுப்புது முன்னேற்றங்கள் மட்டும் இங்கே…
- ஸ்டெம்செல் சிகிச்சை மூலமாக பக்கவாத நோய்களுக்கு ஜப்பானில் சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுள்ளது. இது வெற்றி அடைந்தால் பக்கவாத நோயில் இருந்து முழு விடுதலை கிடைத்துவிடும்.
- ஜீன் தெரபி மூலம் பிறவிக் குறைபாடுகளை சரி செய்யும் சிகிச்சை முறை வெற்றி அடைந்துள்ளது. காது கேளாமைக்கு ஜீன் தெரபி மூலம் முழு குணம் அடைய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
- ஏஐ எனப்படும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் மூலம் கேன்சர், இதயநோய் கண்டறிதல் மிகவும் எளிதாகியுள்ளது. மருத்துவரை விட ஏஐ வேகமாகவும் துல்லியமாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
- தலை, மார்பு பகுதிகளைத் திறந்து செய்யப்படும் ஓப்பன் சர்ஜரிகள் ரோபோ சர்ஜரி மூலம் பெருமளவு குறைந்துள்ளது. இதன் மூலம் குணமடைவது வேகமடைவதுடன் ரத்த இழப்பு குறைகிறது.
- புற்றுநோய் சிகிச்சையில் எல்லோருக்கும் ஒரே மருந்து கொடுத்துவந்த நிலை மாறிவருகிறது. டிஎன்ஏ அடிப்படையில் புற்று நோய்க்கு மருந்து நோய்க்கு ஏற்ற மருந்து தயாரித்து கொடுக்கப்படுவதால் குணமடைவது வேகமடைகிறது.
- வலி மருந்துகள் நிறைய பக்கவிளைவுகளுடன் இருக்கின்றன. இப்போது பக்கவிளைவுகள் இல்லாத வலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விரைவில் விற்பனைக்கு வரும்போது அச்சமின்றி அனைவரும் பயன்படுத்தலாம்.
