ரத்தத்தில் பிஹெச் அபாயம்
மூட்டு வலி ஏற்படுவதற்கு பாதுகாப்பான குடிநீராக நினைக்கும் மினரல் வாட்டரும் ஒரு காரணம் என்கிறது மருத்துவம்.
மூட்டு எலும்பு வலிக்கு மருத்துவர்கள் நிறைய காரணங்களை அடுக்குவார்கள். அதாவது, மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்றெல்லாம் சொல்வார்கள்.
இதனை குறிப்பதற்கு அளவீடாக ரத்தத்தில் இருக்கும் பொடன்ஷியல் ஆஃப் ஹைட்ரஜன் எனப்படும் பிஹெச் அளவு 7.4 இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுப் பொருள் 7க்கு கீழாக இருந்தால் அந்த பொருள் அமிலத் தன்மை உடையது என்றும் 7க்கு மேல் இருந்தால் காரத்தன்மை கொண்டது என்றும் குறிக்கப்ப்டுகிறது. மனிதர்களின் ரத்தம் இயல்பாகவே காரத்தன்மை கொண்டது. அதனாலே 7.4 பிஹெச் என்று அளவிடப்படுகிறது.
ஆபத்தான குளிர் பானங்கள்
இன்று விற்பனைக்குக் கிடைக்கும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை. அதாவது பிஹெச் அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். தொடர்ந்து இந்த வகையிலான குளிர் பானங்களை அருந்தும் போது, ரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
இந்த மாற்றம் காரணமாக பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது ரத்தத்தை காரத்தன்மையாக மாற்ற முயலும்.
கால்சியம்
ரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் நமது ரத்தத்தில் கலந்து இயல்பான காரத்தன்மையை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் ரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து ரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது. இதன் காரணமாக எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
மினரல் வாட்டர்
குளிர் பானங்களில் மட்டும்தான் அமிலத்தன்மை அதிகம் என்பதில்லை. நாம் பாதுகாப்பானதாக நினைத்துக் குடிக்கும் மினரல் வாட்டர், வீட்டில் சுத்திகரிப்பான் வைத்து குடிக்கும் ஆர்.ஓ. வாட்டரிலும் பிஹெச் அளவு 5 முதல் 6 வரையே இருக்கிறது.
அதேநேரம், மண் பானை நீர் மிகவும் பாதுகாப்பானது. ஏனென்றால் இதன் பிஹெச் அளவு 7- 8 ஆகும். கார்போரேட் நிறுவனங்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்து குளிர்பானங்களையும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையும் விற்கிறார்கள் என்பதே உண்மை.
எது நிஜமான மினரல் வாட்டர்
மினரல் வாட்டர் என்பது இயற்கையாக கால்சியம், மெக்னீசியம், சோடியம், பயோகார்பனேட், சல்பேட் ஆகிய அனைத்தும் இணைந்து இருப்பவை. ஆனால், இந்த கனிமச் சேர்க்கை சரியாக நடைபெறுவதில்லை என்பது உண்மை.
பெரும்பாலான மினரல் வாட்டரில் யூரிக் ஆசிட், சோடியம் போன்றவை அதிக அளவில் இருக்கின்றன. இதனால் மூட்டுகளில் யூரிக் ஆசிட் கிரிஸ்டல் தங்குவதால் பாதம் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி உண்டாகலாம்.
சிலர் மினரல் வாட்டர் மட்டும் தான் நல்லது என்று நினைக்கிறார்கள். அதோடு போதிய அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் யூரிக் ஆசிட் வெளியேறாமல் உடலில் தேங்குகிறது. மூட்டுகளில் படிந்து வலியை அதிகரிக்கிறது.
பாதுகாப்பு நடவடிக்கை
எல்லா மினரல் வாட்டரும் சரியானவை அல்ல. எனவே பாட்டில் வாட்டரை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவு சோடியம் உள்ள தண்ணீரையே தேர்வு செய்ய வேண்டும். அதோடு தினமும் உடலுக்கு ஏற்ப 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். மினரல் வாட்டர் மூட்டுவலிக்கு நேரடி காரணம் இல்லை என்றாலும் அதீத பயன்பாடு காரணமாக மூட்டுவலி உண்டாகலாம். எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி மூட்டுவலிக்குத் தீர்வு காணுங்கள்.
