கருணாநிதிக்கு எலுமிச்சம்பழம் மாலை

என்ன செய்தார் சைதை துரைசாமி – 493

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மனு கொடுத்த  சடகோபனுக்கு முதல்வர் கருணாநிதி எலுமிச்சம்பழம் கொடுத்ததும், அது தலைப்புச் செய்தியாக பரபரப்பானது. இது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு வருத்தம் கொடுத்தது என்று சடகோபன் சொன்னதும் சைதை துரைசாமிக்கு ஜிவ்வென்று கோபமாகிவிட்டது.

திட்டமிட்டு எலுமிச்சம்பழம் கொடுத்த கருணாநிதிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று சைதை துரைசாமி ஆவேசமானார். எப்படி அவமானப்படுத்தலாம் என்று எல்லோரிடமும் ஆலோசனை கேட்டார்.

அந்த நேரத்தில் திமுகவில் ஒரு அறிவிப்பு வெளியானது. ’ஏன் விளக்கினோம் எம்.ஜி.ஆரை?’ என்று சைதாப்பேட்டை தேரடியில் முதல்வர் கருணாநிதி தலைமையில் விளக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சைதை துரைசாமி அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தார். முதல்வர் வீட்டிற்கு சென்றபோது அவர் ஒரு எலுமிச்சைப்பழம் கொடுத்தார். அதே முதல்வர் சைதாப்பேட்டைக்கு வருகிறார். இங்கு அவருக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

பொதுக்கூட்ட மேடையில் கருணாநிதிக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவிக்கலாம் என்று சைதை துரைசாமி சொன்ன திட்டத்தைக் கேட்டு, அத்தனை நிர்வாகிகளும்  பயந்துவிட்டனர். இது விபரீத எண்ணம், உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கை செய்தார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment